கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும்
துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே
ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி - தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் சுழலும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு மயங்குகிறது.
தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் - அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய்.
கமலாலயனும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்
மதியுறு வேணி மகிழ்நனும் - நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்
மாலும் - திருமாலும்
வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் - என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே
சிந்துரானன சுந்தரியே - சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே!
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியில் சூடும் உன் மகிழ்நனும், திருமாலும் என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே! சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலையும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு துன்புறுகிறது. அப்படி நான் வருந்தாத வண்ணம் ஒரு நல்ல கதியைக் கொடுத்து அருள் புரிவாய்.
தளர்விலது ஓர் கதியுறு வண்ணம் கருது கண்டாய் - அப்படி நான் மயங்காத வண்ணம் ஒரு நல்ல கதியை அடையும் வண்ணம் அருள் புரிவாய்.
கமலாலயனும் - தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும்
மதியுறு வேணி மகிழ்நனும் - நிலவை தன் முடியில் அணிந்திருக்கும் உன்னுடன் மகிழ்ந்திருக்கும் சிவபெருமானும்
மாலும் - திருமாலும்
வணங்கி என்றும் துதியுறு சேவடியாய் - என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே
சிந்துரானன சுந்தரியே - சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே!
தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும், நிலவை தன் முடியில் சூடும் உன் மகிழ்நனும், திருமாலும் என்றும் வணங்கி போற்றுகின்ற சிவந்த திருவடிகளை உடையவளே! சிந்துர திலகம் அணிந்த முகத்தை உடைய பேரழகியே! தயிரைக் கடையும் மத்தின் சுழற்சியில் அகப்பட்டு இங்கும் அங்கும் அலையும் தயிரைப் போல் என் உயிரும் பிறப்பு இறப்பு என்னும் சுழலில் அகப்பட்டு துன்புறுகிறது. அப்படி நான் வருந்தாத வண்ணம் ஒரு நல்ல கதியைக் கொடுத்து அருள் புரிவாய்.
14 comments:
NALLA IRUKKU...VAZTTHUKKAL...
நன்றி ஹமீது அப்துல்லா
dear Kumaran,
enna marupadiyum thiruvadi charanam endru nambi viteerkala.inthatharam ambigayen malapadangal.ippovum thuthyuru sevadi appuram than sindhuranan sundari.pirappu iarappai manitha manam sugam thukkam allathu pasam bantham ivartil uzhalvathaga vaithu kolla lama. neegal sonna mathiri PADA DARISANATHIRKU ooru thni valai pathivu ungal kaiyal thevai than nandri TRC
Athu sari kumaran,
karnanukkum dharumarukkum uravumurai patri kelvi ezhuppineergale ippozhuthu
sivaperuman abhiramiyai (PARVATHY}
THRUVADIYAI endrum vanaguvatha irukirathe ithai oppukolkireerkala?
TRC
ஆமாம் சார். திருவடிகளை முதலில் சொல்லிவிட்டு பிறகு தான் சிந்துரம் அணிந்த அழகிய திருமுகத்தைச் சொல்கிறார், அபிராமி பட்டரும்.
பிறப்பு இறப்பு என்ற சுழலைப் பற்றி எதையும் வெளிப்படையாகச் சொல்லவில்லை இந்தப் பாட்டில். அதனால் அது இன்பம் துன்பம், பாச பந்தம் எனும் சுழல்களாகவும் பொருள் கொள்ளலாம்.
என்னைப் பொறுத்தவரை மனைவியின் பாதங்களை என்றும் வணங்குவதில் தவறில்லை என்று தான் சொல்லுவேன். :-) வெளிப்படையாக வணங்காவிடினும் எல்லாரும் மனைவி சொன்ன படி தானே நடக்கிறார்கள். அதைத்தான் பெண் புத்தி பின் புத்தி - பின்னால் இருந்து இயக்கும் புத்தி என்று சொன்னார்களோ என்னவோ :-) நமக்கெல்லாம் வழிகாட்டி பிறை சூடிய பெருமான் தான்.
Kumaran,
Pirai sudia peruman (chandra sekaran) endru ennathane nakkal seykereergal. unmayum athuthan. yes they are our back office. TRC
இல்லை சார். மதியுறு வேணி மகிழ்நன் என்று இந்த பாடலில் கூறப்பட்ட இறைவனைத்தான் குறிப்பிட்டேன். உங்களை நக்கல் செய்யவில்லை. ஆனால் நீங்கள் எடுத்துக்கொண்ட அர்த்தமும் நன்றாகத்தான் இருக்கிறது :-)
குமரன், இந்தப்பதிவை நான் தொடந்து வாசிப்பதுண்டு. பதிவுக்கு நன்றி.
இந்தப்பாடலில் இன்பம்/துன்பம், பிறப்பு/இறப்பு, நற்செய்கை/ தீச்செய்கை (இருவினை) என வெளிப்படும் தோற்றங்களில் (ஏனெனில் இரண்டும் ஒரே இடத்தில் தோன்றுவதாயும், மறைவதாயும் இருக்கிறது) என் ஆவி மயங்குகிறது; அம்மயக்கத்தை போக்கவேண்டும் என வேண்டுவதாய்க் கொண்டால் மற்ற சில பாடல்களில் வரும் கருத்துக்களோடு எளிதாகப் பொருந்திப்போகுமோ என எண்ணுகிறேன். நன்றி.
குமரன், இந்தப் பாடலுக்கு நான் முதலில் பின்னூட்டம் போடவில்லை. ஏன்? திரும்பத் திரும்பச் சிந்தித்துப் படித்தேன். அருமையான விளக்கம்.
சரி. விஷயத்திற்கு வருவோம்.
பிறப்பு இறப்பு என்பது சுழற்சி. விந்து சுழன்று நாதம் பிறக்கும் என்று சைவ சித்தாந்தத்தில் சொல்வார்களே. அதற்கும் இதற்கும் தொடர்புண்டா? விந்து என்பது மயிற்றோகை வடிவம். நாதம் ஓங்கார நாதம். சேவலின் வடிவம். அதனால்தான் நாத விந்து கலாதீ நமோ நம! இதை முடிந்தால் இன்னும் விளக்குங்களேன்.
மனைவியை வணங்குவது.....இதை முருகனும் செய்கிறார். உங்களுக்குத் தெரியாத பாடல்களா! அப்பன் போன வழியே மகனும் போனான்.
மிக நல்ல கருத்து தங்கமணி. தொடர்ந்து வாசிப்பதற்கும் இன்று பின்னூட்டம் இட்டதற்கும் நன்றி. தொடர்ந்துப் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.
//திரும்பத் திரும்பச் சிந்தித்துப் படித்தேன்// என்ன இராகவன். எல்லாரும் படித்துச் சிந்திப்பார்கள். நீங்கள் சிந்தித்துப் படித்தேன் என்கிறீர்கள். நட்சத்திரம் ஆனதும் ஆனீர்கள் இப்படியெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டீர்களே? :-) Just Kidding.
எனக்கு சைவ சித்தாந்தம் அவ்வளவு தூரம் தெரியாது இராகவன். நாத பிந்து கலைகளைப் பற்றி நீங்கள் சொன்ன திருப்புகழ் பாட்டிலும் ஞானவெட்டியான் ஐயா உங்கள் பதிவில் இட்டுருந்த ஓம்காரத்தின் (அகர, உகர, மகர விளக்கம்) பொருளிலும் தான் கேள்விபட்டிருக்கிறேன். நீங்களே மேலும் விளக்குங்களேன். இந்த வாரம் முடியாவிட்டால் அடுத்த வாரம் வந்து விளக்குங்கள். :-)
வள்ளியை வணங்கும் கந்தனைப் பற்றி நிறையப் படித்துள்ளேன். உண்மை. சந்திரசேகரன் காட்டிய வழிதான் குமரனும் செல்வது. :-)
// என்ன இராகவன். எல்லாரும் படித்துச் சிந்திப்பார்கள். நீங்கள் சிந்தித்துப் படித்தேன் என்கிறீர்கள். நட்சத்திரம் ஆனதும் ஆனீர்கள் இப்படியெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டீர்களே? :-) Just Kidding. //
முதலில் வழக்கம் போல படித்து விட்டேன். பிறகு சிந்தித்துச் சிந்தித்து மீண்டும் படித்தேன். அதான்.
// நீங்களே மேலும் விளக்குங்களேன். இந்த வாரம் முடியாவிட்டால் அடுத்த வாரம் வந்து விளக்குங்கள். :-) //
இல்லை. இப்பொழுது இல்லை. பிறகொரு சமயம்.
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'பலையென வருந்துன்பம் பனியென நீங்கும்'
நன்றி சிவமுருகன்
Post a Comment