Wednesday, March 08, 2006

157: உறைகின்ற நின் திருக்கோயில் (பாடல் 20)


உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே

உறைகின்ற நின் திருக்கோயில் - அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது

நின் கேள்வர் ஒரு பக்கமோ - உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ - ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ?

அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ - அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ?

கஞ்சமோ - தாமரை மலரோ?

எந்தன் நெஞ்சகமோ - என்னுடைய நெஞ்சமோ?

மறைகின்ற வாரிதியோ - எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ?

பூரணாசல மங்கலையே - எங்கும் பூரணமாய் நிறைந்து நிலையாய் நிற்கும் மங்கல வடிவானவளே!

எங்கும் நீக்கமற நிறைந்து நிலையாய் நிர்கும் மங்கல வடிவான அபிராமி அன்னையே. நீ உறைகின்ற திருக்கோயிலாவது உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ? ஓதப்படுகின்ற நான்கு வேதங்களின் தொடக்கமோ? இல்லை அவற்றின் முடிவோ? அமுதம் போல் குளிர்ந்த நிலவொளியை வீசும் வெண்மையான சந்திரனோ? தாமரை மலரோ? என்னுடைய நெஞ்சமோ? எல்லாவிதமான செல்வங்களும் மறைந்திருக்கும் பாற்கடலோ? நீ எங்கும் நிறைந்தவளானாலும் மேலே சொன்னவிடங்களில் நீ மகிழ்ந்து உறைகின்றாய் போலும்.

40 comments:

said...

அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவள் அன்னை பராசக்தி.

அம்மையின் படமும், கருத்துக்களும் அருமை.

said...

நன்றி சிவமுருகன்

said...

அன்னையின் அருளைப் பெறவும்,பொது பிரார்த்தனைக்காக பாடப் படும் பாடல் இது!!பலர் இதன் விளக்கம் தெரியாமல் பாடுகின்றனர்!!

said...

அருமையான விளக்கங்களுடன் அழகிய அபிராமி படமும் நன்றாக இருக்கிறது.

said...

அபிராமிப் பட்டர், சிவனை உமையாளுக்கு,"கேள்வர்",அதாவது நண்பர் என்கிறார்,நடை முறை வாழ்விலும்
நற்கணவன் -மனைவிக்கு நண்பனே!, நம் நல்ல நண்பர் ,நாம் சொல்வதைக் கேட்பார்.உமையின் சிவனாரும்- நற்கணவர்-நற்றோழர்,ஒரு தோளும்,கொடுத்தவராயிற்றே!!!, அதனால், உமை கூறுவதைக் கேட்பதால், பட்டர் "கேள்வர்" என்கிறாரோ,,????
அடுத்து ,படத்தில் உள்ள அம்மை- மீனாட்சியா,அபிராமியா??.....கிளி வைத்துள்ளார்- அதனால் கேட்டேன்
அமிராமி அம்மையும் கிளி வைத்திருப்பாரா??
யாவுக்கும் மனமார்ந்த நன்றி
யோகன்
பாரிஸ்

said...

சிவமுருகன். இந்தப் பாடலைப் பாடுவதால் என்ன பயன் என்று சொல்லுகிறீர்களா? நன்றி.

said...

எளிமையான பாடலாச்சே இது நடேசன் சார். பொது பிரார்த்தனையில் பாடுவதற்கு உகந்த பாடல். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

said...

நன்றி மணியன். படத்தில் இருப்பது மதுரை நகராளும் மீனாட்சி. அபிராமி அன்னையின் படத்தைல் முந்தையப் பதிவுகளில் இட்டிருக்கின்றேன்.

said...

உண்மை தான் யோகன் சார். ஒரு நல்ல கணவன் தனது மனைவிக்கு ஒரு சிறந்த தோழனாகத் தான் இருப்பான். அதே போல ஒரு நல்ல மனைவி தன் கணவனுக்கு ஒரு சிறந்த தோழியாக இருப்பாள் - அதனால் தானே காதலியை (மனைவியை) சகியே என்கிறார்கள் பாடலாசிரியர்கள்.

நீங்கள் சொல்லும் பொருளும் நன்றாகத் தான் இருக்கிறது. சொல்லுவதை எல்லாம் கேட்கும் கணவர்களுக்கு 'கேள்வர்' என்ற் பெயர் வெகு பொருத்தம். :-)

படத்தில் உள்ள அம்மை நான்மாடக் கூடல் அரசாளும் அங்கயற்கண் அம்மையே!

said...

நல்ல விளக்கம் குமரன். நன்றி.

said...

நன்றி கொத்ஸ்

said...

ஆமாம் பெண்களுக்கு வலம் கொடுக்கக் கூடாது இடம் கொடுக்கலாம் வலம் கொடுத்தால் உங்கள்
ஊர் மீனாட்சியின் ஆட்ச்சிதான்

said...

நல்ல நகைச்சுவை என்னார் ஐயா. அபிராமி பட்டர் 'நின் கேள்வர் ஒரு பக்கமோ' என்று தான் கேட்கிறார். நான் தான் விளக்கத்தில் இடப்பக்கம் என்று சொல்லிவிட்டேன். ஆமாம். நீங்கள் சொல்வது சரி தான். எல்லா சிவன் கோவில்களிலும் அம்மை அப்பனின் இடப்புறம் தான் கோவில் கொண்டிருக்கிறாள். ஓவியங்களிலும் சரி; சிற்பங்களிலும் சரி; அம்மை அப்பனின் இடப்பக்கம் தான். மதுரையில் மட்டும் தான் அம்மையின் கோயில் அப்பனின் கோவிலுக்கு வலப்பக்கம் இருக்கிறது. உலகெங்கும் எங்கெல்லாம் மீனாட்சி அம்மன் கோவில் இருக்கிறதோ அங்கெல்லாம் அதே மாதிரி தான் என்று நினைக்கிறேன். எனக்குத் தெரிந்த மீனாட்சி அம்மன் ஆலயங்களை நினைவில் நிறுத்திப் பார்த்த போது அப்படித் தான் தோன்றுகிறது. ஏன் அப்படி மீனாட்சி அம்மை மட்டும் அப்பனின் வலப்புறம் கோவில் கொள்கிறாள் என்று தெரியுமா?

said...

அருமையான பதிவு.

வாழ்த்துக்கள்,
குமரேஷ்

said...

உன்னுடன் ஈடுஇணையில்லாத நட்பினைக் கொண்டுள்ள உன் தோழராம் சிவபெருமானின் இடப் பக்கமோ?//


பெண்கள் தினத்தன்று பெண்ணுக்கு சம உரிமை கொடுத்து சரிபாதியாய் நின்ற அர்த்தனாரியின் மகிமையை நாம் அனைவரும் நினைவு கூர்வது அவசியம்.

சிவனை உமையின் எஜமானாக பாராமல் தோழனாக பார்த்த பட்டர் உண்மையிலேயே பெண்ணுரிமை வாதிதான்

said...

எங்கும் நிறைந்தவள் என்று சொல்வது புரியாது என நினைத்துச் சில இடங்களைச் சொல்லிவிட்டு பின் வணங்குவது ஒரு குறிப்பாலான செய்தி.

நன்றி.

said...

நன்றி குமரேஷ்.

said...

வித்தியாசமான பார்வை செல்வன். மிக்க நன்றி. :-)

said...

ஆமாம் இராம்பிரசாத் அண்ணா. சரியாகச் சொன்னீர்கள்.

said...

நல்ல பாடல். அதற்கு அழகான விளக்கம்.
// நீ எங்கும் நிறைந்தவளானாலும் மேலே சொன்னவிடங்களில் நீ மகிழ்ந்து உறைகின்றாய் போலும். //

நிச்சயமாக.
அன்னையவள் மிக மகிழ்ந்து உறையும்சிறப்பான இடங்கள் இவையாவும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு வாய்ந்தவை. இறைவனின் இடபாகமும், நால்வேதங்களும் எவ்வளவு உயர்ந்தவை என நாம் அறிவோம். 'கஞ்சகமோ' என்பதை ஆயிரம் இதழ்கள் உள்ள தாமரையைக் (உச்சந்தலையில் இருக்கும் சகச்ராதார சக்கரம்) குறிப்பதாகக் கொள்ளலாம். "சகஸ்ரதள பத்மஸ்தா'- என்பது தேவியின் 1008 நாமங்களில் ஒன்று. பூரண சந்திரனின் 16 கலைகளின் உருவமாக பராசக்தி அறியப்படுகிறாள்.(வளர்பிறை சந்திரன் லலிதையின் ரூபம், தேய்பிறை காளியின் ரூபம் )
இவையனைத்திலும் மகிழ்ந்துறையும் தேவி என் நெஞ்சிலும் அவ்வாறே மகிழ்வுடன் கோயில் கொண்டாள் என்பது எத்தனை உயர்ந்த பக்திநிலை? அப்படி தேவி உறையத் தகுதி கொண்ட நெஞ்சம் எத்தனை பிறவிகளின் தவப்பயனோ?

said...

அன்புடையீர்,

ஜெயஸ்ரீ கூரியபடி கஞ்சம் என்பது ஆகாயத்தாமரையாம் வெண்டாமரை. சந்திரகலைகளின் ஒவ்வொரு பிறையும் ஒரு சக்தியின் கூறு.
வாரிதி என்பது கடல். அதுவும் திருப்பாற்கடலாம் முகுளம் மிதக்கும் இடம்.
இறுதியாக, இந்த இடங்களில் நீ எங்குதான் தங்கியிருக்கிறாயோ? என வினவுகிறார்.

இப்பாட்லைப் பாட மங்கலம் தங்கும் (குறிப்பாக மடந்தையற்கு)

said...

உண்மை தான் ஜெயஷ்ரி. அபிராமி பட்டர் பட்டியல் இடும் இடங்களில் எல்லாம் மகிழ்ந்துறையும் தேவி என் நெஞ்சிலும் அவ்வாறே மகிழ்வுடன் கோயில் கொண்டாள் என்பது மிக் உயர்ந்த நிலையே. அப்படிப்பட்ட நெஞ்சம் கிடைக்க பல பிறவிகளில் தவமும் அன்னையின் காரணமில்லாம பொழியும் கருணையும் வேண்டும்.

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

said...

விளக்கத்திற்கு மிக்க நன்றி ஞானவெட்டியான் ஐயா. பாடலைப் பாடுவதால் கிடைக்கும் பலனைச் சொன்னதற்கும் மிக்க நன்றி.

said...

Thanks Arul. Please go to http://www.suratha.com/leader.htm
On the bottom of this page, you will see two boxes. When you type in Thanglish like ammaa, appaa etc you will see that appearing as அம்மா, அப்பா in the second box. You can copy and paste it wherever you want - in blogs or in comments or in MS documents.

said...

TEST

said...

//ஏன் அப்படி மீனாட்சி அம்மை மட்டும் அப்பனின் வலப்புறம் கோவில் கொள்கிறாள் என்று தெரியுமா?//

அன்புள்ள குமரன்

நீங்கள் இதைக் கேட்டு பல நாள் ஆனாலும், இப்போது தான் பதிக்க முடிந்தது
எனக்குள் விடை எங்கோ கேட்டது போல் இருந்தது; விரித்துச் சொல்ல உடனே இயலவில்லை.

பெரும்பாலும் வைணவத் தலங்களில், தாயார் வலப்பக்கமே எழுந்தருளி இருப்பார். "வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கை" - வக்ஷஸ்தல வாசம் - நித்ய கல்யாணத் திருக்கோலம்.
பல படங்கள்/ஓவியங்களிலும் தாயார் பெருமாள், வலம் இடம் என்று தான் இருப்பார்கள்.

ஏன் நம் கல்யாணத்தில் கூட, மணப்பெண், நம் வலப்புறம் தானே அமர்கிறாள்?
பெருமாள் கல்யாண குண மங்களன் என்பதால் இப்படி.

ஆனால் ஈசனோ, யோகீஸ்வரன். போகத்திலும் யோகி. அதனால் சில தலங்களில் அம்பிகையை இடப்புறத்திலும் (யோக நிலை), மதுரை, நெல்லை போன்ற கல்யாணத் தலங்களில், வலப்புறத்திலும் (போக நிலை) கொண்டு சேவை சாதிக்கிறான்

அண்மையில் வந்த சக்தி விகடன் பார்த்தேன்; அதில் “சிவாலயங்களில் இரண்டு அம்பிகை சந்நிதிகள் ஏன்?” என்ற கட்டுரையில் கீழ்கண்ட விளக்கமும் உள்ளது.
"
திருக்கோயில்களில் அம்பிகை, சிவபெருமானுக்கு இணையாக இடப் பாகத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் கோலம், அவள் தவம் புரிந்து ஈசனின் இடப் பாகம் பெற்று அவருடன் சேர்ந்து அன்பர்களுக்கு சகல நலன்களையும் அருளும் நிலையாகும். ‘உபதேசக் கோலம்’ என்று போற்றப்படுகிறது (திருக்காளத்தி, திருப்பனந்தாள் போன்றவை உபதேசத் தலங்கள்). அம்பிகை உள் மண்டபத்தில் சிவபெருமானின் கருவறையை நோக்கியவாறு, தெற்கு நோக்கிக் காட்சி தருகிறாள். இந்த நிலை, அம்பிகை உயிர்களுக்கு ஞானம் உபதேசிக்கும் கோலம் ஆகும்.

இறைவனின் வலப் பக்கத்தில் (பெரும்பாலும் கிழக்கு நோக்கி) அம்பிகை வீற்றிருக்கும் கோலம், கல்யாணத் திருக்கோலம் ஆகும்! மதுரை (மீனாட்சி), நெல்லை (காந்திமதி) மற்றும் குற்றாலம் (குழல்வாய் மொழியாள்) ஆகிய தலங்களில் அம்பிகை கல்யாணத் திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளதால் இவை ‘கல்யாணத் தலங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன.
"

said...

கல்யாணத்திருத்தலங்களைப் பற்றிய விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி திரு. ரவிசங்கர் கண்ணபிரான். நீங்கள் சொன்ன விளக்கத்தை மனதில் நிறுத்தி எனக்குத் தெரிந்த சிவாலயங்களில் அம்பிகையின் சன்னதி இருக்கும் நிலையை எண்ணிப் பார்த்தால் மிக அருமையாக உணர்கிறேன். மிக்க நன்றி.

நித்ய கல்யாண பெருமாளின் வலப்புறம் தாயார் இருப்பதைப் பற்றிய விளக்கமும் அருமை.

said...

நன்றி தமிழ்க்குழந்தை

said...

வணக்கம் குமரன்,

மிகவும் அருமையான பதிவு. உங்கள் ப்லாகில் நான் நிறைய தமிழும் ஆன்மீகமும் கற்றுக்கொள்வேன் என நம்புகிறேன்.

நன்றி,
நரியா

said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நரியா. தொடர்ந்து வந்துப் படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

said...

அக்கறையுடன், மதிப்பறிந்து தாங்கள் செய்து வரும் இந்த திருப்பணி மிகவும் உயர்வானது. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என தங்களது இயல்பையும் லேசாக கோடிட்டு காட்டுகிறது. மிகவும் மகிழ்ச்சி.

said...

மிக்க நன்றி காழியூரன். தொடர்ந்து வந்துப் படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

said...

அண்ணே ரொம்ப அருமையா இருக்கு!!! எளிவான விளக்கங்கள்...

நன்றி
குமரன்

said...

நன்றி தம்பி குமரன்.

ஒரு சின்ன வேண்டுகோள். முடியுமான்னு பாருங்க. ஏற்கனவே தமிழ்மணத்துல இரண்டு குமரன்கள் இருக்கிறோம். அதற்கே சில நேரங்கள்ல குழப்பம் வருது. இப்ப நீங்களும் வந்துருக்கிறீங்க. நீங்க உங்க ஊர்ப்பெயரோ வேறு ஏதாவது அடைமொழியோ போட்டுக்கிறீங்களா? முடியாதுன்னா சொல்லுங்க. நான் போட்டுக்கிறேன். :-)

said...

இன்றே இப்பதிவு பக்கம் வந்தேன் ...மிக நல்ல காரியம்...நேர்த்தியாய் செய்யும் குமரனுக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்...ச.சங்கர்

said...

மிக்க நன்றி CT

said...

மிக்க நன்றி ச.சங்கர்

said...

//உறைகின்ற நின் திருக்கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
அறைகின்ற நான்மறையில் அடியோ முடியோ அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ
மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே//

ஆமாம், நம் நெஞ்சகத்தையும் ஒரு பொருட்டாய் மதித்து அதில் குடியிருக்கும் அன்னையின் கருணைக்கு அளவேது! கண்களைப் பனிக்கச் செய்யும் அற்புதமான பாடலுக்கு அருமையான விளக்கம்!

said...

எனக்கும் மிகப் பிடித்த பாடல் இது கவிநயா. நன்றிகள்.

said...

sir enakku therintha villakkaththai solgirean.pothuvaaga kalyanathrgu mun pen karavain valathu pakkam iruppar.kalyaanam muntha pin pengal karavain idappakkaththil serkkappadugiraargal.emperumaan eesan than thunaiviyaana meenakshiyai ippadi thaan than udampin sari paathiyai koduththaar enpathu en karuththu.madurai enbathaal meenakshi ku muthalidam kodukkappadukirathu.thx u