
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது அன்பர் கூட்டம் தன்னை
விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன் மூவுலகுக்கு
உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே
கொள்ளேன் மனத்தில் நின் கோலம் அல்லாது - உன் திருவுருவத்தை அன்றி வேறு உலக விதயங்களை என் மனத்தில் கொள்ளேன்
அன்பர் கூட்டம் தன்னை விள்ளேன் - உன் அன்பர்கள் கூட்டத்தை விலகமாட்டேன் (விலக்கமாட்டேன்)
பரசமயம் விரும்பேன் - உன்னைத் துதிப்பதன்றி உலக விதயங்களைத் துதிக்கும் பர சமயங்களை விரும்ப மாட்டேன்.
வியன் மூவுலகுக்கு உள்ளே - மூன்று உலகங்களுக்கும் உள்ளே நின்று அனைத்தையும் இயக்குபவளே
அனைத்தினுக்கும் புறம்பே - இவற்றையும் தாண்டி இந்த பிரபஞ்சம் எல்லாம் தாண்டியும் இருப்பவளே
(அணுவிற்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய் இருப்பவளே)
உள்ளத்தே விளைந்த கள்ளே - உள்ளத்தில் விளைந்த அமுதமே
களிக்கும் களியே - எல்லாவிதமான இன்பததையும் அனுபவிக்கும் ஆனந்தவடிவானவளே
அளிய என் கண்மணியே - எளியேன் மேல் கருணை கொண்ட என் கண்மணி போன்றவளே
4 comments:
//கள்ளே களிக்கும் களியே//
கள் பொதுவாக அடுத்தவரைத் தான் மயக்கும்! தானே மயங்குமோ?
ஆனால் அம்பிகையின் நாமம் கேட்ட மாத்திரத்தில், கள்ளே அவள் பெயரில் மயங்குகிறது! - இப்படிக் கள்ளே களிக்கும் களிப்பே!
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே!
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மனச் சஞ்சலம் உண்டாகாதிருக்கும்'.
நல்ல விளக்கம் இரவிசங்கர். :-)
நன்றி சிவமுருகன்.
Post a Comment