Wednesday, December 28, 2005

91: நான் முன் செய்த புண்ணியம் ஏது? (பாடல் 12)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே

கண்ணியது உன் புகழ் - நான் எப்போதும் பாடல்கள் கொண்டு பாடுவது உன் புகழ்

கற்பது உன் நாமம் - நான் எப்போதும் கற்பது உன் நாமம்

கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாத அம்புயத்தில் - என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில் (அம்புயம் - அம்புஜம் என்னும் வடமொழிப் பெயரின் திரிபு; அம்பு - நீர், ஜம் - பிறந்தது; நீரில் பிறந்த மலர் அம்புஜம்)

பகல் இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து - நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன்.

நான் முன் செய்த புண்ணியம் ஏது - இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் என்ன புண்ணியம் செய்தேன்?

என் அம்மே - என் தாயே

புவி ஏழையும் பூத்தவளே - ஏழு உலகையும் பெற்றவளே.

ஏழு உலகையும் பெற்ற என் தாயே. அபிராமி அன்னையே. எப்போதும் என் பாடல்களின் பொருளாய் இருப்பது உனது புகழே. எப்போதும் நான் சொல்லுவதும் உனது நாமமே. என் மனம் கசிந்து பக்தி பண்ணுவதோ உன் இரு திருவடித் தாமரைகளில். நான் பகலும் இரவும் விரும்பிச் சேர்ந்திருப்பது உன்னை விரும்பும் அடியார் கூட்டத்துடன். இப்படி செய்ய வேண்டியவைகளையே உன் அருளால் செய்கிறேனே. நான் அதற்கு என்ன புண்ணியம் செய்தேன்?

13 comments:

said...

அம்புஜம் என்ற சொல்லிற்குப் பொருள் விளக்கம் தெரிந்து கொண்டேன் குமரன். அதுவும் அருமையான விளக்கத்தோடு.

அதே போல இந்த அம்மே என்ற சொல்லாடலும் பல செய்யுட்களில் வந்துள்ளதை நான் பார்த்துள்ளேன்.

said...

ஆமாம் இராகவன். அம்மே என்ற சொல்லாடலும் பல செய்யுட்களில் வந்துள்ளது.

said...

நன்றி குமரன்,
இந்த அம்புஜம் என்றப் பதத்திற்குதான் சொல்லியிருந்தேன், எனது பெரியம்மாவின் பெயர் அம்புஜம்,அவருக்கே அவரது பெயரின் பொருள் தெரியவில்லை.அதைப்பற்றியும் ,நாயகி நான்முகி என்ற பாடலுக்கு விளக்கமும் கேட்டிருந்தேன்.அதை நீங்கள் பப்ளிஷ் செய்யவில்லை என்றுத் தெரிகிறது?

said...

நன்றி குமரன்,
இந்த அம்புஜம் என்றப் பதத்திற்குதான் சொல்லியிருந்தேன், எனது பெரியம்மாவின் பெயர் அம்புஜம்,அவருக்கே அவரது பெயரின் பொருள் தெரியவில்லை.அதைப்பற்றியும் ,நாயகி நான்முகி என்ற பாடலுக்கு விளக்கமும் கேட்டிருந்தேன்.அதை நீங்கள் பப்ளிஷ் செய்யவில்லை என்றுத் தெரிகிறது?

said...

நன்றி குமரன்,
இந்த அம்புஜம் என்றப் பதத்திற்குதான் சொல்லியிருந்தேன், எனது பெரியம்மாவின் பெயர் அம்புஜம்,அவருக்கே அவரது பெயரின் பொருள் தெரியவில்லை.அதைப்பற்றியும் ,நாயகி நான்முகி என்ற பாடலுக்கு விளக்கமும் கேட்டிருந்தேன்.அதை நீங்கள் பப்ளிஷ் செய்யவில்லை என்றுத் தெரிகிறது?

said...

திரு. நடேசன். ஏதோ காரணத்தால் எனக்கு உங்கள் கேள்விகள் வரவில்லை. அதனால் பதில் சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.

அம்புஜம் என்பதற்குப் பொருள் மேலே பார்த்து விட்டீர்கள் என்பது உங்கள் பின்னூட்டத்திலிருந்து தெரிகிறது.

15 பாடல்களுக்குத் தான் இதுவரை பொருள் எழுத முடிந்திருக்கிறது. நீங்கள் சொல்லும் 'நாயகி நான்முகி' எனத் தொடங்கும் பாடல் 50வது பாடல். உங்களுக்கு உடனே அதன் பொருள் வேண்டும் என்றால் சொல்லுங்கள். தனி மடலில் எழுதி அனுப்புகிறேன்.

தொடர்ந்து எல்லாப் பதிவுகளையும் படித்து ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி.

said...

ஜெய்ஹிந்த்,!!நன்றி அந்தப் பாடலுக்கு எனக்கு என்று எழுதினால் அத்தனை சுவையாக இருக்குமா?
இதைப் போன்ற பக்கங்களைஎழுதும்போது மட்டும் தயவு செய்து தெரிவிக்கவும்.நன்றி.ஆமாம் நான் தனியாக ஒரு மின்னஞ்சல் அனுப்பினேனே!அது கிடைக்கவில்லையா?

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நெஞ்சம் தியானத்தில் நிலைபேறு அடையும்'.

said...

நன்றி சிவமுருகன்

said...

இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'நெஞ்சம் தியானத்தில் நிலைபேறு அடையும்'

said...

மிக்க நன்றி சிவமுருகன்.

said...

எனக்குப் மிகப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று! அழகுற விளக்கியிருக்கிறீர்கள்!

said...

நன்றி கவிநயா.