நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே
நாயேனையும் - நாயை விட ஈனனான என்னையும்
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே
நாயேனையும் - நாயை விட ஈனனான என்னையும்
இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து - இங்கு ஒரு பொருட்டாக விரும்பி வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் - என் முயற்சி சிறிதும் இன்றி நீயே உன் கருணையினால், என்னைப் பற்றிய நினைவே எனக்கு இல்லாதபடி, என்னை ஆண்டு கொண்டாய்
நின்னை உள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய் - எந்தக் காரணமும் பார்க்காத கருணையில் சிறந்தவள் நீ என்ற உன் உன்மை நிலையையும் உள்ள வண்ணம் அறியும் அறிவினையும் பேயேனாகிய எனக்குத் தந்தாய்
என்ன பேறு பெற்றேன் - இந்த அறிவினை உன் அருளால் பெற என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே - என் தாயே! மலையரசன் மகளே! அடியார்களுக்கு அருளும் கருணையால் சிவந்த கண்களையுடைய திருமாலவனின் திருத்தங்கச்சியே!
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் நாய்த்தலையே என்று நிறைய இந்தப் பாடல் நாயேனையும் என்று தொடங்கியது. இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.
எதுகை: நாயேனையும், நீயே, பேயேன், தாயே
மோனை: நாயேனையும் - நயந்து, நீயே - நினைவின்றி - நின்னை, பேயேன் - பேறு - பெற்றேன், தாயே - திருத்தங்கச்சியே.

8 comments:
இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'மாயை அகன்று உண்மை உணர்வு உண்டாகும்'.
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.
உன்னை உள்ள வண்ணம் அறியும் அறிவு தந்தாய் என்றதனால் 'மாயை விலகி உண்மை உணர்வு உண்டாகும்' என்ற பயன் மிகப் பொருத்தமே சிவமுருகன். மிக்க நன்றி.
நன்றி கிரண்
குமரா!
உயர்ந்தோர் தங்களை என்றும் தாழ்த்துவர்,,,இந்த நாயேன் ..இப்படியே
மேலும்...இந்த தங்கச்சி எனும் சொல்
அண்ணாச்சி போல் கிராமிய சொச்சைத் தமிழ் எனக் கருதியிருந்தேன். நயம் மிக்க தெய்வீகச் சொல்லென அபிராமி அந்தாதி படித்த போது உணர்ந்தேன்.
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அழகான விளக்கம், குமரன், வழக்கம் போல...
நன்றி கவிநயா அக்கா.
Post a Comment