Friday, October 07, 2005

கார் அமர் மேனிக் கணபதி

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - உலகேழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே -
கார் அமர் மேனிக் கணபதியே - நிற்கக் கட்டுரையே.

தார் அமர் கொன்றையும் - மாலையில் அமைந்துள்ள கொன்றைப் பூ - கொன்றைப் பூ மாலையும்
சண்பக மாலையும்
சாத்தும் - அணியும்
தில்லை ஊரர் - தில்லையில் - சிதம்பரத்தில் வாழும் நடராஜன்
தம் பாகத்து - அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும்
உமை - சிவகாமி - பார்வதி
மைந்தனே - மகனே
உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி - சீர் பொருந்திய அபிராமி அன்னையின் அருளையும் அழகையும் எடுத்துக் கூறும்
அந்தாதி - அந்தாதி தொடையில் அமைந்த இந்த நூல்
எப்போதும் என் சிந்தையுள்ளே நிற்க
கார் அமர் மேனி கணபதியே - மேகம் போல கருநிற மேனியை உடைய பேரழகு கணபதியே
கட்டுரையே - அருள் புரிவாய்.

கொன்றை மாலையும் சண்பக மாலையும் அணியும் நடராஜனுக்கும் அவர் உடலில் ஒரு பாதியாய் நிற்கும் உமையம்மைக்கும் மைந்தனே! மேகம் போல் கரிய உடல் கொண்ட கணபதியே! உலகேழையும் பெற்ற அன்னையாம் அபிராமியின் புகழை கூறும் இந்த அந்தாதி என் சிந்தையுள் எப்போதும் நிற்க நீ அருள் புரிவாய்.

8 comments:

said...

Abirami Anthathiyin 51 padal muthal 70 varai therintha yennaku, porul nandr vilanga nalla vaaippu.

Naam yerkanvey ithai discuss seyaa arambithu irrunthom. Ippa neenga orruku uriyavar aggiteninga. Ellaram payan addayattum...Siva..(ippadi kumaranuku blog katthu kuttuthitingaley:-( )

Nandri Kumaran.

said...

நன்றி குமரன். சேவையை தொடங்கிட்டீங்க. 'கட்டுரையே' என்றால் 'அருள் புரிவாய்' .. கொஞ்சம் விளக்குங்கள்.

said...

சிவா

நல்ல கேள்வி. 'கட்டுரையே'க்கு நேர்ப்பொருள் கூறினால் அது 'நன்றாய் சொல்லிக்கொடுப்பாய்' என்று வரும். இந்த பாட்டில் 'அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே நிற்க கட்டுரையே' என்று உள்ளது - அதனை 'அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே நிற்க நன்றாய் சொல்லிக்கொடுப்பாய்' என்றும் பொருள் கூறலாம்.

உங்கள் கேள்வியைப் பார்த்து மகிழ்ச்சியாக உள்ளது. விளக்கம் கொடுக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள்.

குமரன்.

said...

Katturai enbatharku porrul "Intha seyyul" athavathu ingey Abirami Anthathi allavo? Nevir kurrum vilakkam eppadi ingey sari varum.Mellum sirru Katurrai variga endral athai patri "villaka urrai" allathu sirru thobupu endru sollalamey ozzheyea eppadi porrul varum? Kuttram kurra villai,Santhegam irrikirathu.Villakavum.Nandri

said...

நல்ல சந்தேகம் நடராஜன். இன்னொரு உதாரணத்தின் மூலம் இதை விளக்குகிறேன். 'நாற்றம்' என்றால் என்ன பொருள் கூறுவீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள். பின்னர் உங்கள் கேள்விக்கு நான் விடை கூறுகிறேன்.

said...

Naatram enbadhan Porrul, Vasanai enbhathu aggum. Tharpothu athu thirinthu Nattram endral turnattram mattum thaan endru aggi vittathu. Ithu yaan arintha vilakam.

Nandri.

said...

ரொம்ப சரி. எப்படி நாற்றம் என்பதன் பொருள் இப்பொழுது திரிந்து வழங்குகிறதோ அது போல் தான் 'கட்டுரை' என்பதன் பொருளும் சிறிது மாறி வழங்குகிறது.

'கட்டுரை' என்பது 'கட்டு உரை' என்று பிரிந்து 'நன்றாய் விளக்கமாய் சொல்லிக் கொடுப்பாய்' என்று பொருள் தரும். தற்போதும் அது ஏறக்குறைய அதே பொருளில் தான் வழங்கி வருகிறது. 'விளக்கமாய் எழுதுதல்' என்ற பொருளில் 'கட்டுரை' வழங்க ஆரம்பித்து தற்போது 'விளக்கமாக எழுதப்பட்ட வரைவு' என்ற பொருளில் வழங்கி வருகிறது. மேலும் சந்தேகம் இருந்தாலோ அல்லது ஏதாவது தவறு இருந்தாலோ தயங்காமல் கேளுங்கள். நாம் சேர்ந்து கற்றுக் கொள்வோம்.

கட்டுரையின் பொருளைக் கட்டுரைக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.

said...

Villakam miga nandru. Athu polla ummathu "katurrai" endra varathayin villayadulum arrumai.

Nandri.