கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே
கோமளவல்லியை - இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே
கோமளவல்லியை - இளமையும் மென்மையும் கொண்ட கொடி போன்றவளை
அல்லியம் தாமரைக் கோயில் வைகும் - அழகிய அல்லி, தாமரை மலர்களால் ஆன திருக்கோவிலில் வாழும்
யாமளவல்லியை - இறைவருடன் இரட்டையாக நிற்கும் தேவியை
ஏதம் இலாளை - குற்றமொன்றில்லாதவளை
எழுத அரிய - வரைவதற்கு எளிதில்லாத
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை - அழகான கருநிற திருமேனி கொண்ட எல்லா கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை
தம்மால் ஆமளவும் தொழுவார் - தம்மால் முடிந்த அளவும் தொழுபவர்கள்
எழு பாருக்கும் ஆதிபரே - சென்ற இடத்தில் எல்லாம் பெருமை பெறுவார்கள்.
அன்னை இறைவரின் திருமேனியில் ஒரு பகுதியாக அவனுடன் இரட்டைப் பிறவியைப் போல் இருப்பதால் யாமளா என்ற திருப்பெயர் கொள்கிறாள். வரையவோ வடிக்கவோ எளிதில் இயலாத திருமேனி அழகைப் பெற்றவள். மிகவும் மென்மையான கொடியைப் போன்றவள். தாமரைத் திருக்கொவிலில் உறைபவள். குற்றம் குறை என்று ஒன்றுமே இல்லாதவள். அப்படிப்பட்டவளை தம்மால் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவில் குறையாமல் தொழுதால் அவர்கள் ஏழு உலகங்களையும் உடையவர்கள் ஆவார்கள்; எழு பார் என்பதற்கு அவர் எழுகின்ற/செல்லுகின்ற இடம் என்று பொருள் கொண்டால் அவர்கள் கால் பட்ட இடத்திற்கெல்லாம் உரிமையாளர்களாக அவர்கள் ஆவார்கள்.
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் கோமளமே என்று நிறைய இந்தப் பாடல் கோமளவல்லியை என்று தொடங்கியது. இந்தப் பாடல் ஆதிபரே என்று நிறைய அடுத்தப் பாடல் ஆதித்தன் என்று தொடங்கும். இப்படி ஒரு பாடலில் இறுதியில் வரும் சொல்லோ எழுத்தோ அடுத்தப் பாடலில் தொடக்கத்தில் வருமாறு அமைத்துப் பாடுவது அந்தாதித் தொடை.
எதுகை: கோமளவல்லியை, யாமளவல்லியை, சாமளமேனி, ஆமளவும்
மோனை: கோமளவல்லியை - கோயில், யாமளவல்லியை - ஏதம் - இலாளை - எழுதரிய, சாமளமேனி - சகலகலாமயில் - தன்னை - தம்மால், ஆமளவும் - ஆதிபரே.

சேலம் ஸ்கந்தாஸ்ரமத்தில் உறையும் அன்னையின் திருவுருவப் படத்திற்கு நன்றி: திரு.ஜாக்கி சேகர்
16 comments:
அன்னையின் அழகே அழகு! என்ன ஒரு ஜொலிப்பு! அல்லியந்தாமரைக் கோயில் வாழும் அன்னையை ஆமளவும் தொழுவோம்!
நன்றி, குமரா!
அல்லியந்தாமரை கோவில் கொள்ளும் அம்பிகையின் அருட் பாடல்களை பொருளுடன் பதியும் குமரனுக்கு நன்றி.
கோம்ம்ல, யாளா, சாமள வல்லியைத் தொழுதால்
எதுதான் கிடைக்காது!
இதுபோன்ற நல்விளக்கங்களும் கூடத்தான் கிடைக்கும்!!
நன்றி, குமரன்.
இக அருமையான பாடல்!
படமும் அற்புதம்!
அபிராமி அன்னைபுகழ் பாடும்
அந்தாதி தனை அருமையாக விளக்கிச்சொல்லும்
அன்பர் அபிராம பட்டருக்கோர் வணக்கம்.
ஆன்மீகப் பதிவுகளிலே உங்கள்
இடுகை இனிமை.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://arthamullavalaipathivugal.blogspot.com
தம்மால் ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே என்பதால் இப்பாடலை தொடர்ந்து பாராயனம் செய்தால் 'எங்கும் தலைமையும் புகழும் பெறலாம்'.
நன்றி கவிநயா அக்கா. ஆமளவும் தொழுவோம்.
நன்றி கைலாஷி.
நன்றி எஸ்.கே.
நன்றி சுப்புரத்தினம் ஐயா.
பொருத்தமாகச் சொன்னீர்கள். நன்றி சிவமுருகன்.
வாக்கு தவறாமல் என் பெயர் போட்டதற்க்கு என் நன்றிகள்
:-)
நன்றி ஜாக்கி சேகர்.
தமிழ் குமரா வாழ்க நீவிர் பல்லாண்டு
தழைத்தோங்கும் தங்கள் தொண்டு
தங்களின் பாதார விந்தத்தில்
தலை தாழ்த்தி வணஙகும்
அடியார்க்கு அடியான்
இனியன் பாலாஜி
அடியேன் சிறியன் அறிவிலும் வயதிலும்! வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி இனியன் பாலாஜி ஐயா.
I BOW MY HEAD TO YOUR HOLY FEET. BECAUSE THERE SHOULD BE A BLESSINGS FROM ANNAI ABIRAMI TO WRITE ABOUT ABIRAMIANDHADHI. I THINK YOU HAVE BEEN BLESSED BY MY ABIRAMI. SO THANKS FOR YOUR ARTICLE ABIRAMI ANDHADHI
Thank you very much for your blessings!
Post a Comment